8.6.10

முத்துக்குளித்த வைரம்



செயற்கை ஓய்ஸ்டருலகிலுதித்த
இயற்கை முத்து

கரித்த கார்பன் பூமியில்
உயிர்த்த ஜாகர் வைரம்


தத்தகாரத்தில் 
தனி 'ழ'கரம் படைத்தவன் நீ
 

என் நிலவில் தெரியும் வானம் நீ
மூளையின் முதல் (க)விதை நீ

காற்று கிழிபட நடக்கவும்
சிங்கப்பாலை தங்ககிண்ணத்தில் வைக்கவும்
பெருமுடா முக்கோண சூட்சுமமும்
தெளிய வைத்தவன் நீ

ஊனுருக்கும் உன்னத மொழி
தேனூற்ற, தீருமென் பேரிச்சை

உன்கவித்திறம்
எங்ஙனம் சாத்தியம்?
யோசிக்குமென்மனம்

சந்திரன் மனோகாரகன்
சுக்கிரன் கலாகாரகன்

இவ்விருவரும் சேர்ந்த பெயராலா ?

வெண்ணுடையுடுத்தி
வெண்பா படைப்பதாலா ?

முறுக்கிய  வானம் நோக்கும்
மீசை கவிதை ரீசீவரா ?

இல்லை


புறத்தோற்றம் புனைவுகளே
அகத்தினுளிருக்கும் அறிவுச்சட்டையென
ஆகத்தெளிந்தேன்.

காமக்களிப்பை
காசீந்து பெறலாம்

கவிக்களிப்பை ?

வாய்ப்பில்லை

அது குண்டலினி குலுக்கி
மூலாதாரம் முத்தமிடும்
ஆன்ம ஸ்பரிஸம்

எழில் கவிதைகளுடன்
தெரிக்கும் உனதுச்சரிப்பை
எங்கோ ஒரு மூலையில்
தமிழ்த்தாய் ஆனந்த நீர் சொரிய
ராம காதை கேட்ட அனுமனாய்..............

22 comments:

பாலா said...

வைரமுத்து !!!

விஜய் said...

@ பாலா

நன்றி தம்பி

ரொம்ப நாளாச்சு பார்த்து

விஜய்

ஹேமா said...

வைரமுத்து அவர்களுக்குப்
பாராட்டா கவிதை.அவர் பார்க்கணுமே.சந்தோஷப்படுவார்.
நல்லாருக்கு விஜய்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பங்கு. :-)

நேசமித்ரன் said...

விஜய்

வாழ்த்துக்கள் கவிஞரே

நல்லா இருக்கு

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு விஜய்...

அன்புடன் நான் said...

கவிதை வைரமுத்து!

எங்க ரொம்ப நாளா காணும்???

விஜய் said...

@ ஹேமா

ஆமாம் ஹேமா

(அவருக்கும் ஒரு காப்பி அனுப்பிடுவோம்)

நன்றி

விஜய்

விஜய் said...

@ பா.ரா

நன்றி பங்கு

விஜய்

விஜய் said...

@ நேசன்

நன்றி கவிஞரே

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அரசு

நன்றி நண்பா

சிறிது அலுவல் அதனால்தான்

விஜய்

Kala said...

எல்லோரும் வைரமுத்துவை
பார்கிறார்கள் உங்கள் கவியில்
வாழ்த்துகள் கவிஞரே!

எனக்கு வைரத்தோட...ஒரு “வைரத்துக்கும்”
சேர்த்துச் செதுக்கியமாதிரித் தோணுது!! கவி

பட்டை தீட்டிய வைரம் மிளிர்கிறது விஜய்
நன்றி

கமலேஷ் said...

வைரமுத்துவையே மிஞ்சிடுவீங்க போல கவிஞரே...
ரொம்ப நல்லா வந்திருக்கு..வாழ்த்துக்கள் தொடருங்கள்...

அன்புடன் மலிக்கா said...

முத்தாக இருக்கு சகோதரரே வாழ்த்துக்கள்..

விஜய் said...

@ கலா

இக்கவியை பட்டை தீட்டுவதே நீங்கள்தானே

நன்றி

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

அன்பு மிகுதியால் கூறிய வாழ்த்தாக ஏற்று கொள்கிறேன்.

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

சிவாஜி சங்கர் said...

வைர முத்தண்ணன்... :))

Madhan Karky said...

Simple and nice poem. Will forward your poem to my father.
Regards,
Madhan Karky

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

ஆமாம் தம்பி

நன்றி

விஜய்

விஜய் said...

@ மதன் கார்க்கி

இதைவிட வேறென்ன வேண்டுமெனக்கு,

நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி நண்பா

விஜய்