26.4.10

உலகின் முதல் தொழில் 18+
குதப்பிய  வெற்றிலையும்
குழம்பிய மாராப்பும் 
வட்ட பொட்டும் 
வாசனை பவுடரும் 
காப்புரிமை பெற்ற 
காம தெய்வங்கள் 

முலைப்பால் கட்டியும் 
தலைப்பு விளக்கி 
தாகமடக்கும் 
தரும மகள்கள் 

சந்திரன் வன்புணர்ந்த 
கருவானமிருட்டிலும் 
இந்திரிய நெடி 
இதயம் முழுதும் 

சுருட்டி பெற்ற பணத்தில் 
மூத்தவளுக்கு முக்கா சைஸ் நோட்டும் 
சின்னவனுக்கு சுரமருந்தும் 

அவளின் வேண்டுதல் 
ஆண்டவனிடம் 
அடுத்து வர்ரவனாவது 
ஆணுரையோடு வரவேண்டும்..........

30 comments:

செந்தில் நாதன் Senthil Nathan said...

கவிதை எல்லாம் சரி...அந்த புகைப்படம் போட உங்களுக்கு உரிமை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து!!

கூகிள் அந்த படத்தை தருவதலோ, ஒரு செய்தியில் அது இருப்பதாலோ, நீங்கள் அதை பயன்படுத்துவது சரி ஆகாது!!

விஜய் said...

தகவலுக்கு நன்றி

மாற்றி விட்டேன்

விஜய்

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

//மூத்தவளுக்கு முக்கா சைஸ் நோட்டும்
சின்னவனுக்கு சுரமருந்தும் //

கொன்னுட்டிங்க தலைவா..

விஜய் said...

@ சித்தூர்.எஸ்.முருகேசன்

ஆஹா ஜோதிட ஓஷோவே பாராட்டிட்டாரே

நன்றி தலைவா

விஜய்

’மனவிழி’சத்ரியன் said...

கஷ்டம் சாமி.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////சந்திரன் வன்புணர்ந்த
கருவானமிருட்டிலும்
இந்திரிய நெடி
இதயம் முழுதும் ////

மிகவும் அழுத்தமான வார்த்தைகள் . சிறப்பாக உள்ளது , தொடருங்கள் . மீண்டும் வருவேன்

+யோகி+ said...

//சந்திரன் வன்புணர்ந்த
கருவானமிருட்டிலும்
இந்திரிய நெடி
இதயம் முழுதும்//

பின்னிப்புட்டிங்க சார்
அருமை அருமை
நன்றி

விஜய் said...

@ சத்ரியன்

ரொம்ப கஷ்டம் நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

தங்களின் தொடர் வருகையும் மனதார்ந்த வாழ்த்தும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது நண்பா

நெஞ்சார்ந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ யோகி

தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி தம்பி

விஜய்

Kala said...

பாவப்பட்ட பெண்ணினம்...

ஒரு ஆணின் எண்ணோட்டத்தில்
எழுந்த கவி
அழுகிறது
அதன்
ஆழத்தில்..
என் மனம்
வலிக்கின்றது

நன்றி

ஸ்ரீராம். said...

அடுத்து வருபவனாவது...
எதிர்பார்ப்புகள் வரையறைக்குள்..

விஜய் said...

@ கலா
எழுதும் போதே மனம் கனத்து தான் எழுதினேன்

நன்றி

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி ஸ்ரீராம்

விஜய்

சுதாகர் குமார் said...

அருமையான வரிகள் ஆழமான புனைவு .. வாழ்த்துகள்

விஜய் said...

@ சுதாகர் குமார்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி தம்பி

விஜய்

thenammailakshmanan said...

என்ன கொடுமை இது .....ரொம்ப பாதித்த கவிதை விஜய்...

thenammailakshmanan said...

சிங்கை ., மலேஷியா சென்று இருந்தேன் விஜய்...தற்போது வந்துவிட்டேன்..

ஹேமா said...

விஜய்...ரொம்பவே பயப்படுத்திறீங்க !

விஜய் said...

@ தேனக்கா

வாங்க அக்கா

வெளிநாட்டு பயணம் இனிதாக இருந்ததா ?

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

எழுதுவதற்கு முன் பலமுறை யோசித்தேன். யாரும் முகம் சுளித்து விட கூடாது என்று.

என்ன செய்வது சில பெண்களின் நிலைமை இவ்வாறு இருக்கிறது.

நன்றி ஹேமா

விஜய்

தமிழரசி said...

//அவளின் வேண்டுதல்
ஆண்டவனிடம்
அடுத்து வர்ரவனாவது
ஆணுரையோடு வரவேண்டும்..//

அவளுக்கு ஆண்டவன் வரும் ஆடவன் தான் ஆகையால் அவள் வேண்டும் வரம் தாங்களேன் வேட்டைக்கு வருவோர்களே...

அன்புடன் மலிக்கா said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோதரா. வார்த்தைகளில் வலிமட்டும் தெரிகிறது..

விஜய் said...

@ தமிழ்

மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

ஆமாம் சகோதரி வலிதான்

மிகுந்த நன்றி

விஜய்

LK said...

vaarthaigalil appengalin vali terigirathu

விஜய் said...

@ LK

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி கார்த்திக்

திருஷ் said...

வாசிப்பதற்கு நன்றாக இருந்தது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ திருஷ்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

Anonymous said...

ஆணுரையோடு ஆணுறையோடு ன்னு இருக்கணும்.. எழுத்துப்பிழை