27.9.09

ஆத்திச்சூடி - 2009


அகமது தெளி 

ஆகமம் மற

இச்சை தவிர் 

ஈகை மிகு 

உளமை உரை

ஊகை பெருக்கு 

எளிமை பழகு 

ஏருழவர் பூசி 

ஐம்புலம் அடக்கு 

ஒடுங்கல் பிழை 

ஓங்காரம் தொழு 

ஒளவை நினை 

எஃகு மனம் கொள்

18 comments:

ஹேமா said...

விஜய் நேற்று உங்கள் பதிவின் பக்கம் வந்தேனே.அப்போ இல்லை.அதன் பிறகு பதிவாக்கியிருக்கிறீர்கள்.
அத்தனையும் புதிய ஒளவையாராகி புதிய ஆத்திச்சூடியைத் தந்திருக்கிறீங்க.இன்றைய வாழ்வியலுக்குப் பொருத்தமாகவே இருக்கு.ஐம்புலன்(ம்)அடக்கு.
கவனிங்க.

ஆகமம் மற,இச்சை தவிர்,ஏருழவர் பூசி எனக்கு நிறையப் பிடிச்சிருக்கு.

விஜய் said...

அப்பாடா, boost கிடைத்து விட்டது. நன்றி ஹேமா .

ஐம்புலன்
ஐம்புலம் - அகராதியில் இரண்டும் ஒன்றுதான் ஹேமா.

மிக மிக நன்றி.

காரூரன் said...

வார்த்தைகளை குறைத்து தைத்த‌ கவி!
கோர்வையினால் உயிருடன் ஆரம்பித்திருக்கின்றது.
வாழ்த்துக்கள்!

விஜய் said...

தங்கள் வரிகள் தன்னம்பிக்கை தருபவை. தொடர்ந்து வாசியுங்கள்.

மிக்க நன்றி நண்பரே......................

பா.ராஜாராம் said...

குறுக்க தரித்த அகரம்,விஜய்!வாழ்த்துக்கள்!

விஜய் said...

உளம் பெருகிய வாழ்த்துக்கு நன்றி நண்பரே................

சந்தான சங்கர் said...

மாத்திச்சூடினாலும்
ஆத்திச்சூடியின்
மணம் மாறவில்லை..

ஒளவையின் பேரனே...

விஜய் said...

சங்கர், தங்களின் பின்னூட்டமே எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை தரும் வைட்டமின்.

நன்றி.

Thenammai Lakshmanan said...

ஈழம்
வென்றெழு
நட்பூ
காதல்
ஆத்திச்சூடி
எல்லாமே
superb
vijay
i do want to
write like u

chinna chinna
artham serinththa varigal

விஜய் said...

மிக்க நன்றி. நீங்களே மிக சிறப்பாக எழுதுகிறீர்கள். நான் புதியவன். கவிதை பழகுகிறேன்.
தங்களின் மனமுவந்த வாழ்த்துக்கு மிக மிக நன்றி.

Buஸூly said...

nice......

விஜய் said...

Thanks Friend.

ISR Selvakumar said...

தற்போது நான் ”அவர்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட டியுனுக்கு சரியான பாடல் வரிகள் அமையாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் தற்செயலாக ஆத்திச்சூடியை அந்த டியுனுக்கு பாடிப் பார்த்த பொழுது ஓரளவுக்கு சரியாக வந்தது. ஆனால் இசையமைப்பாளருக்கு முழுத் திருப்தியில்லை. ஓரிரு வார்த்தைகளை மட்டும் மாற்றி பாடிப் பார்க்கலாம் என்று முடிவாகியது. ஆனால் அவ்வளவு எளிதாக வார்த்தைகள் வசப்படவில்லை.

அதனால் ஆத்திச்சூடியை டியுனுக்குள் செருகும் முயற்சியை கைவிட்டோம்.

கடைசியில் ஒரு புதிய இளம் கவிஞரை வைத்து புதிய பாடல் வரிகளை எழுதி, பாடலும் பதிவாகிவிட்டது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், உங்களுடைய ஆத்திச்சூடியை படித்ததும், அடடா முதலிலேயே இவர் சிக்கியிருந்தால் நம்ம டியுனுக்கு ஏற்றமாதிரி ஆத்திச்சூடியை மாற்றித் தந்திருப்பாரோ எனத் தோன்றியது.

விஜய் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

essusara said...

டேய் உனக்கு கவிதை எழுத வரும்னு இப்பதாண்டா தெரியுது .

நண்பர்களே விஜயின் நீண்ட நாள் நண்பன் நான். சரியான குண்டக்க மண்டக்க பார்ட்டி .
ஆனா கவிதை எல்லாம் எழுதுவான்னு இப்பதான் தெரியுது

நல்ல guitarist கூட ............

டேய் வாழ்த்துக்கள் டா.

விஜய் said...

தேங்க்ஸ் டா. அடிக்கடி வா.

Unknown said...

YOUR NEW ATHISUDI SIMPLY SUPERB. WRITE MORE AND MORE. I WISH YOU BEST OF LUCK.

விஜய் said...

Thanks Senthil. do visit frequently.